சதுரங்கத்தில் வெற்றிக்கான வேட்டை
திருப்பூர் : திருப்பூர் வடக்கு குறுமைய மாணவியர், 19 வயது பிரிவில் முதலிடம் பெற அரசு பள்ளி மாணவியரிடையே கடும் போட்டி நிலவியது.திருப்பூர், சிறுபூலுவப்பட்டி, ஜெய்சாரதா பள்ளியில், வடக்கு குறுமைய சதுரங்க போட்டி நேற்று நடந்தது. பள்ளி செயலாளர் கீர்த்திகாவாணி, பள்ளி முதல்வர் மணிமலர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாணவர் பிரிவு
பதினொன்று வயது பிரிவில் நேருநகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அதிலேஷ் முதலிடம், விகாஸ் வித்யாலயா பள்ளி தேவதருண், வித்யாமந்திர் பள்ளி தருண் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாமிடம். 14 வயது பிரிவில் மெஜஸ்டிக் கான்வென்ட் பள்ளி பிரனவவர்ஷன், ஜெய்சாரதா பள்ளி ரித்திக், நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அபினேஷ் முறையே முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.17 வயது பிரிவில், பிஷப் பள்ளி மாதவன், சவுதீஷ்குமார் முதல் இரு இடங்களையும், ஜெய் சாரதா பள்ளி ஸ்ரீ ஹரி மூன்றாமிடமும் பெற்றனர். 19 வயது பிரிவில், கோகுலகிருஷ்ணன் (திருமுருகன் மெட்ரிக்) முதலிடம், ஹரிவிக்னேஷ் (பிஷப் பள்ளி) 2 வது இடம், அருனால்டு ஜோசுவா (இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி) 3 வது இடமும் வென்றனர். மாணவியர் பிரிவு
11 வயது ரித்திக் (ஸ்ரீசாய் மெட்ரிக்) முதலிடம், அவந்திகாஸ்ரீ (திருமுருகன் மெட்ரிக்) 2 வது இடம், ஹரிஷ்கவிதா (ஸ்ரீ சாரதா பள்ளி) 3 வது இடம். 14 வயது பிரிவு முதலிடம் ரிடின்டாமெர்சி (இன்பேன்ட்ஜீசஸ் பள்ளி), 2 வது இடம், ராஜேஸ்வரி (விகாஸ் ஜூனியர்ஸ் பள்ளி), 3 வது இடம், கர்ஷனா (மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நெசவாளர் காலனி).17 வயது பிரிவில், அதிசம்ரிதா முதலிடம் (ஸ்ரீ சாய் மெட்ரிக்), 2 வது இடம் அபிநயா (ஜெய்வாபாய் பள்ளி), மூன்றாவது இடம் அர்ச்சனா (வி.கே., அரசு பள்ளி). 19 வயது பிரிவில், வி.கே. அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி அக் ஷயா தர்ஷினி முதலிடம், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அஷிகா, 2 வது இடம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பூபியா, 3 வது இடம்.