உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐ.கே.எப்., கண்காட்சி இன்று துவங்குகிறது

ஐ.கே.எப்., கண்காட்சி இன்று துவங்குகிறது

திருப்பூர்;திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி சாதனைகளை காட்சிப்படுத்தும், 51வது இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி, இன்று துவங்குகிறது.திருப்பூர் ஐ.கே.எப்., அசோசியேஷன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில், 51வது ஐ.கே.எப்., கண்காட்சி இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. கண்காட்சியை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திறந்து வைக்கிறார். கண்காட்சியில், 'பருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை பாதுகாப்போம்' என்ற தலைப்புடன், பசுமை சார் உற்பத்தி ஆடைகள், துணி ரகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சி, தினமும், காலை 10:00 மணி முதல், மாலை, 6:00 வரை நடக்க உள்ளது. கண்காட்சியில், வெளிநாட்டு வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் பங்கேற்கின்றன. திருப்பூர், கரூர் பகுதிகளை சேர்ந்த ஆயத்த ஆடை உற்பத்தியாளர், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், பின்னலாடை தொழில்துறையினர் பங்கேற்று பயன்பெறலாம் என, ஐ.கே.எப்., கண்காட்சி நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி