மேலும் செய்திகள்
பா.ஜ., கூட்டம்
28-Aug-2024
திருப்பூர்;பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி (மனதின் குரல்) நேற்று நடந்தது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைமை அலுவலகம் உட்பட, 19 மண்டலங்களில், ஆயிரத்து, 33 பூத்களில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஒளிபரப்பட்டது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமும் மண்டல அளவில் நடந்தது. வீரபாண்டி மண்டலத்தில் நடந்த முகாமில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் பங்கேற்றார்.---பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் பங்கேற்றார்.
28-Aug-2024