மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா; மாணவர்களுக்கு பரிசு
19-Feb-2025
திருப்பூர் : அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் உள்ள தி குவெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு விழா, கோவை, நேரு அரங்கில் மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மாதம், 28ம் தேதியும், மழலையர் முதல் 2 ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு மார்ச், 7 ம் தேதியும் கொண்டாடப்பட்டது.விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு நல அலுவலர் புவனேஸ்வரி, கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் தலைவர் மோகன்கார்த்திக் பங்கேற்று, தலைமை வகித்தனர். மாணவர்களின் அணிவகுப்பு, யோகா, பிரமிடு, பயிற்சி நடனங்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பல தரப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி தலைவர் கலாமணி, பள்ளி தாளாளர் நிவேதா தர்ஷன், பள்ளியின் தலைமை ஆசிரியர் வினோதா உட்பட பலர் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
19-Feb-2025