உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளங்கலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி 

இளங்கலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி 

திருப்பூர்;'அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம், மாநிலம் முழுதும் உள்ள, 164 அரசு கலைக் கல்லுாரிகளில் உள்ள, 1.07 லட்சம் இளங்கலை பட்டப்படிப்பு இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு, மே, 5ம் தேதி துவங்கியது; 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கடந்த, 20ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைய இருந்தது.அரசு கல்லுாரிகளில் இணைய உள்ள மாணவ, மாணவியருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் விதமாக காலக்கெடு, இன்று (மே 24) வரை நீட்டிக்கப்பட்டது.வரும், 27ல் தர வரிசைப்பட்டியல் வெளியிட்டு, மறுநாள் (மே 28ம் தேதி) சிறப்பு ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் துவங்குமென கல்லுாரி கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை