புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்சி
உடுமலை; பட்டுக்கூடு உற்பத்தியில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து, மத்திய பட்டு வளர்ச்சி வாரியம் சார்பில், விவசாயிகளுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.உடுமலையிலுள்ள, மத்திய பட்டு வளர்ச்சி வாரியம், ஆராய்ச்சி விரிவாக்க மையம் சார்பில், பட்டு விவசாயிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்றுமுன்தினம் துவங்கியது. இன்று (15ம் தேதி) வரை, மூன்று நாட்கள் நடக்கும் முகாமில், உடுமலை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் பங்கேற்றனர்.இதில், மல்பெரி சாகுபடி, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கூடு உற்பத்தி குறித்த புதிய தொழில் நுட்பங்கள் குறித்து, மூத்த விஞ்ஞானி ஞானகுமார் டேனியல், தொழில் நுட்ப அலுவலர் செல்லையா மற்றும் அதிகாரிகள் பயிற்சியளித்தனர்.