உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / த.வெ.க., மகளிரணி ஆலோசனைக்கூட்டம்

த.வெ.க., மகளிரணி ஆலோசனைக்கூட்டம்

அவிநாசி; அவிநாசியில் தமிழக வெற்றிக்கழகத்தின் அவிநாசி நகர, ஒன்றிய மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை அளித்து விருது வழங்கப்பட்டது.சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற ஹரிணி, துவாரகா, ஸ்ரீ ஹரி; வாள்வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சாதனா, தனலட்சுமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பரிசுத்தொகை மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினர்.மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், துணை செயலாளர் நேசராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் ஷாபி, பாண்டிச்செல்வி, விஜயா, நகர மகளிர் அணி தலைவி மஞ்சு, அவிநாசி நகரச் செயலாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி