உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துார்வாரப்படாத மழை நீர் ஓடை மழைக்காலத்தில் சிக்கல்

துார்வாரப்படாத மழை நீர் ஓடை மழைக்காலத்தில் சிக்கல்

உடுமலை;பருவமழைக்கு முன், நகரின் முக்கிய மழை நீர் வடிகாலாக உள்ள கழுத்தறுத்தான் பள்ளத்தை துார்வாரினால், மழைக்கால சேதத்தை தவிர்க்கலாம்.உடுமலை நகரில், தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் ஆகியவை பிரதான மழை நீர் ஓடைகளாக உள்ளன. குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு பிறகு, சுருங்கி போன இந்த ஓடைகளின் வழியாகவே நகரின் மொத்த வெள்ள நீரும் வெளியேறுகிறது.எனவே, இந்த ஓடைகளை மேம்படுத்த, சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறிப்பிட்ட துாரத்துக்கு, கான்கிரீட் கரை அமைக்கப்பட்டது. இருப்பினும் தொடர் பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை.வடகிழக்கு பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், கழுத்தறுத்தான் பள்ளம் புதர் மண்டி, துார்வாரப்படாமல் உள்ளது.இதனால், மழைக்காலத்தில், நகர குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நீர் ஆங்காங்கே தடைபட்டு, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.எனவே, கழுத்தறுத்தான் பள்ளத்தில், புதர்களை அகற்றி, துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மழைக்கால சேதத்தை தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ