வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
திருப்பூர்;மங்கலம், சின்னப்புத்துாரில், வலம்புரி விநாயகர் உள்ளிட்ட கோவில்கள் கும்பாபிேஷகம் நடந்தது.சின்னப்புத்துாரில் சர்வசித்தி வலம்புரி விநாயகர், மாகாளியம்மன், கன்னிமார் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கும்பாபிேஷக விழா கடந்த, 28ம் தேதி, மகா கணபதி பூஜையுடன் துவங்கியது.பூமி பூஜை, பூர்ணாகுதி ஆகியனவும், மலைக்கோவிலில் இருந்து தீர்த்தக் குடம், முளைப்பாலிகை ஆகியன எடுத்து வரும் நிகழ்வும் தொடர்ந்து முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.கடந்த 29ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை, சுவாமி சிலைகள் கண் திறப்பு, கோபுர கலசம் நிறுவுதல் ஆகியன நடந்தது.தொடர்ந்து நான்காம் கால யாக பூஜைகளும், மகா தீபாராதனையும், கலசங்கள் புறப்பாடும், கோவில்கள் மகா கும்பாபிேஷகமும் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.