உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.10.15 கோடி காய்கறி வர்த்தகம்

உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.10.15 கோடி காய்கறி வர்த்தகம்

திருப்பூர்; திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தையில், பிப்., மாதத்தில், 2.83 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.பிப்., மாதம், பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தையில், 2,193 டன் காய்கறி வரத்தாக இருந்தது. முப்பது நாட்களில், ஏழு கோடியே, 32 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. பிப்., மாதம் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து, 10.15 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், ''தெற்கு உழவர் சந்தையில் ஜனவரி மாதம், 2,161 டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. பிப்., மாதம், 32 டன் உயர்ந்து, 2,193 டன் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து உயர்ந்த போதும், 8.14 கோடிரூபாயாக இருந்த வர்த்தகம், 7.32 கோடி ரூபாயாக குறைந்து விட்டது. வடக்கு உழவர் சந்தையில், ஜனவரி மாதம், 3.22 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்றது. பிப்ரவரியில், 2.83 கோடி ரூபாய்க்கு மட்டும் காய்கறி விற்பனை நடந்துள்ளது. 798 டன்னாக இருந்த ஜனவரி மாத வரத்து, பிப்., மாதம் 779 டன்னாக குறைந்தது. வரத்து குறைந்த நிலையில், விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லாததால், முந்தைய மாதத்தை போன்று வருவாய் ஈட்ட முடியவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை