விஜய் கட்சிக்கொடி அகற்ற உத்தரவு
திருப்பூர்:திருப்பூரில் பல்வேறு இடங்களில் முன் அனுமதியின்றி, கொடிக்கம்பங்கள் நடப்பட்டு கொடி பறக்கவிடப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் என்று போலீஸ் தரப்பு அறிவுறுத்தியதாக தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறினர்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கொடியை கடந்த 22ம் தேதி அறிமுகம் செய்தார். திருப்பூரில் போலீசார், உள்ளாட்சி அமைப்புகளில் முறையான முன்அனுமதி பெறாமல், பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி பறக்க விடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 'கட்சியினரே முன்வந்து கொடிகளை அகற்ற வேண்டும். முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்ற பின், கொடிகளை ஏற்றிக் கொள்ளலாம்,' என நேற்று, போலீசார், மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் பாலமுருகன் கூறுகையில்,'27ம் தேதிக்குள் அனுமதி வாங்கி, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றப்படும். தற்போது, கொடியேற்றப்பட்ட இடங்களில், முன்வந்து கொடிகளை அகற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மாநில தலைமை ஆலோசனைக்கு ஏற்ப செயல்படுவோம்,' என்றார்.