உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காலமுறை ஊதியம் வேண்டும் கிராம ஊழியர் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வேண்டும் கிராம ஊழியர் வலியுறுத்தல்

அவிநாசி:அவிநாசி, மேற்கு ரத வீதியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட தணிக்கையாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் திருமலைவாசன், மாநில பொதுச் செயலாளர் ரவி, மாநில செயலாளர் அப்துல் மஜீத், முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் சங்கர், முன்னாள் மாநில சங்க ஆலோசகர் மாரியப்பன், மகேந்திரன் ஆகியோர் பொது குழுவிற்கான சிறப்புரை ஆற்றினர். காலமுறை ஊதியம், 'டி' பிரிவு பட்டியல் சேர்த்தல், கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அவிநாசி கிளை தலைவர் முருகேசன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் அருணாசலம் ஆகியோர் செய்திருந்தனர். அருளானந்தம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை