வெள்ளகோவில்;வெள்ளகோவில் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில், 5வது புத்தக திருவிழாவில், 'வாழ்க்கை ஒரு வரம்' என்ற தலைப்பில் பேச்சாளர் ராமலிங்கம் பேசியதாவது:சின்னத்திரையில் வரும் 'சீரியல்'களில், குடும்பங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையிலான கதைகள் காண்பிக்கப்படுகின்றன. இந்த நாடகங்கள், பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 'சீரியல்' கதைகளை, பார்ப்பதோடு மறந்துவிட வேண்டும்; அதை மனதில் வைத்துக்கொள்ள கூடாது. மறந்துவிட வேண்டும்.ஊடகங்களின் தாக்கம், கலாசார மாற்றம் போன்றவை, வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி விட்டது; முன்னோர் காண்பித்த முறையை முற்றிலும் இழந்துவிட்டோம். ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு, ஆரவாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதத்தன்மை கேள்விக்குறி
ஒரு காலத்தில் மனிதத் தன்மை நிறைந்த மண் என்ற பெருமை இருந்தது; தற்போது, மனித தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. நாளைய சமுதாயம் என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. உறவுகள் என்பது, இறைவன் கொடுத்த வரம். அதை வரமாக மாற்றிக் கொள்வதும், சாபமாக மாற்றிக் கொள்வதும், அவரவர் கையில் தான் உள்ளது. நம் குழந்தைகள் நல்லவர்களாக வளர்கிறார்கள் என்று சொல்வதுதான், பெருமிதம் நிறைந்த வாழ்க்கை.தற்போதைய சூழலில், திருமண விழா துவங்கி அனைத்தும், பணம் கொடுத்தால் போதும், தனியார் நிறுவனங்களே நடத்தி கொடுத்து விடுகின்றன. உரிமை கொண்டாடிய உறவுகள், இன்று காணாமல் போய்விட்டன.தங்கள் பொறுப்பு என்ன என்பது பெற்றோருக்கு தெரியவில்லை. வாழ்க்கை சூழல் அடியோடு மாறிவிட்டது. கலாசாரம் தலைகீழாக மாறிவிட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.உறவுகள் என்பது, இறைவன் கொடுத்த வரம். அதை வரமாக மாற்றிக் கொள்வதும், சாபமாக மாற்றிக் கொள்வதும், அவரவர் கையில் தான் உள்ளது