உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முக்கிய தினங்களில் மிஸ் செய்கிறோம்: இன்ஸ்பெக்டர் தம்பதியர் உருக்கம்

முக்கிய தினங்களில் மிஸ் செய்கிறோம்: இன்ஸ்பெக்டர் தம்பதியர் உருக்கம்

திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார்; குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வானை, 41 ஆகியோர் தம்பதியர். இவர்களுக்கு ஒன்பது வயதில் மகன்; ஐந்து வயதில் மகள் உள்ளனர்.கணேஷ்குமார்: பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தாலும், தேர்வு நேரங்களில் வீட்டில் இருந்து எங்களால் சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது. எங்கள் பணிச்சூழலை சொல்லி மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியாது. குழந்தைகளை மட்டுமின்றி, உறவினர்களைச் சந்திப்பதும் அரிதாக உள்ளது. இருவரும் சேர்ந்து, எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. யாராவது ஒருவர் தான் செல்ல முடியும். இதை உறவினர்கள்கூடப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.எங்கள் வேலை குறித்து குழந்தைகள் நன்றாக தெரிந்து கொண்டனர். அப்பா எந்த நேரம் என்றாலும் வருவார்; வேலையென்றால் கிளம்பி விடுவார் என்று குழந்தைகளுக்கு புரிந்து விட்டது. இதனால், அதை ஏற்று கொண்டு விட்டனர். முக்கிய விசேஷ தினங்களில் 'மிஸ்' செய்வது இருவருக்கும் வருத்தமாக இருக்கும்.தெய்வானை: வீட்டில் தாத்தா, பாட்டி, அருகில் அத்தை உள்ளிட்டோர் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளை பார்த்து கொள்கின்றனர். இதன் காரணமாக, சமாளித்து வருகிறோம். பணி முடிந்து எப்போது வந்தாலும், நேரம் கிடைக்கும் போது, அவர்களுடன் பிரதானமாக நேரத்தை ஒதுக்கி உடன் இருப்போம்.எங்கள் இருவரையும் பல நாட்கள், முக்கிய தினங்களில் குழந்தைகள் 'மிஸ்' செய்வது உண்டும். ஆனால், எங்களின் பணி சூழல் ஆகியவற்றை தெரிந்த காரணத்தால், நாளடைவில் இதை புரிந்து கொண்டனர். அவர்களுக்கு அந்த ஏக்கம் வராத வகையில் பார்த்து கொள்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி