உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடையூறுகளை கடந்து முன்னேற வேண்டும்

இடையூறுகளை கடந்து முன்னேற வேண்டும்

இந்த அறிவியல் யுகத்தில், பெண்கள் கோலோச்சும் துறைகளில், ஓட்டுனர் பணியும் ஒன்று. அவ்வகையில், பல்லடத்தில், பிரியா என்பவர், ஆட்டோ இயக்கி, குடும்ப பாரத்தை சுமந்து வருகிறார்.இது குறித்து அவர் கூறியதாவது:சமீபகாலமாக, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் படித்து, உள்ளூரில் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் சென்று வேலை பார்க்கின்றனர். அந்த அளவுக்கு, பெண்கள், கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். முந்தைய காலங்களைப் போன்று இல்லாமல், பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.இவ்வாறு, பெண்கள் இன்று எத்தனையோ துறைகளில் முன்னுக்கு வந்துள்ளனர். படிப்பில் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக துணிந்து செயல்படுகின்றனர். தன்னம்பிக்கையுடன், யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக உழைத்து முன்னேறுவதில் பெண்களுக்கு நிகர் பெண்களே. பல்வேறு இடையூறுகளை கடந்து, நானும் ஒரு பெண் தொழிலாளி என்பதால், இந்நாளில், மகளிர் தினத்தை கொண்டாடுவதை எனக்கு பெருமையே.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை