உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொத்த வியாபாரிகளை குறிவைத்து மோசடி மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை பாயுமா?

மொத்த வியாபாரிகளை குறிவைத்து மோசடி மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை பாயுமா?

திருப்பூர்:பல்லடத்தில், மொத்த வியாபாரியிடம், பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முந்திரியை பெற்று மோசடியில் ஈடுபட்ட கோவை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பல்லடத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம், கோவையை சேர்ந்த ஜெமீஷா, 34 என்பவர், பத்து லட்சம் ரூபாய்க்கு, ஒன்றரை டன் முந்திரி பருப்பை கொள்முதல் செய்தது. வியாபாரிக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினார்.இதுதொடர்பாக வியாபாரி விசாரித்த போது, ஜெமீஷா, நாமக்கல், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இதே போன்று சிறிய தொகையை முன்பணமாக கொடுத்து விட்டு, பொருள்களை வாங்கிய பின், மீதி பணத்தை தராமல் மோசடியில் ஈடுபடுவது தெரிந்தது. மோசடி தொடர்பான புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.கடந்த வாரம் தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஜெமீஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி குறித்து விசாரிக்க அவரை ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். மொத்த வியாபாரிகளை குறி வைத்து, வாங்கும் பொருட்களின் விலையை அதிகமாக விலை பேசி வாங்கிய பின், அந்த பொருட்களை வெளியில் விற்று கொண்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.திருவண்ணாமலையில், 12 லட்சம் ரூபாய், நாமக்கல்லில், நான்கு லட்சம் ரூபாய் ஏமாற்றினார். அங்கு கொடுக்கப்பட்ட புகார்களில் போலீசார் அழைத்து விசாரித்தது தெரிந்தது.''மோசடியில் தொடர்புடைய கும்பல் தமிழகம் முழுவதும் 'நெட்வொர்க்' கொண்டிருக்கிறது; ஏமாற்றப்படும் வியாபாரிகள் மிரட்டப்படுவதால், பலர் புகார் கொடுப்பதில்லை'' என்கிறார்கள் மொத்த வியாபாரிகள் சிலர்.மோசடியில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி