ஜவுளித் துறையை ஆளப்போகும்... செயற்கை நுாலிழை!
திருப்பூரில் நேற்று துவங்கிய, 'யார்னெக்ஸ்' மற்றும் டெக்ஸ் இந்தியா கண்காட்சியை பார்வையிட்டு, புது வரவுகளை பார்வையிட்டு, திருப்பூர் தொழில்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மீதுள்ள நம்பிக்கையில், ஸ்டால் அமைத்துள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிறுவனங்கள் என, அனைத்து தரப்பினரும், பசுமை சார் உற்பத்திக்கான செற்கை நுாலிழை மற்றும் மறுசுழற்சி நுாலிழை தொடர்பான வர்த்தக விசாரணையில், மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தொழில் துறையை சேர்ந்த சிலரின் கருத்துகள்...--------------------------------பசுமை சார் உற்பத்திஉலக நாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, பசுமை சார் உற்பத்தியை எதிர்பார்க்கின்றன. மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், கழிவுகளே மீண்டும் பயன்படுத்தும் பொருட்களாக மாறுகின்றன. பின்னலாடை மற்றும் ஓவன் துணிகளை வெட்டும் போது உருவாகும் கழிவுகளை (வேஸ்ட்) வாங்கி, கலர் வாரியாக தரம்பிரித்து, அவற்றை மறுசுழற்சி முறையில், மீண்டும் சாயமிடப்பட்ட நுாலாக மாற்றுகிறோம். இதனால், ஒரு கிலோ நுால் உற்பத்திக்காக, 7.50 கிலோ கார்பன் டைஆக்ஸைடு உருவாவது தவிர்க்கப்படுகிறது; 2,626 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. மறுசுழற்சி நுாலிழை மற்றும் துணி வகைகளை தேவைக்கு ஏற்ப வழங்கி வருகிறோம்.- செந்தில்நுாற்பாலை உரிமையாளர்----------------ஆக்கப்பூர்வமான விசாரணை'ஜின்னிங் டூ கார்மென்ட்ஸ்' என்று கூறுவது போல், பருத்தியை பஞ்சாக மாற்றுவது துவங்கி, ஆடைகளாக வடிவமைப்பது வரையிலான சேவையை வழங்கி வருகிறோம். கோவில்பட்டி, கடலுார், சாத்துார் போன்ற ஊர்களில் மில்கள் உள்ளன. பருத்தி மற்றும் பாலியஸ்டர் கலந்த நுால்கள் தயாரித்து கொடுக்கிறோம். கண்காட்சியில், வாடிக்கையாளர்கள் விசாரணை ஆக்கப்பூர்வமாக நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.- ஸ்ரீநாத்நுாற்பாலை மேலாளர்----------------பயனுள்ள கண்காட்சிகண்காட்சியை முழுமையாக சுற்றுப்பார்க்க, அரைநாள் தேவைப்படும். ஒவ்வொரு ஸ்டால்களிலும், செயற்கை நுாலிழை, இயற்கை வழி நுாலிழை, பருத்தி நுாலிழை, மறுசுழற்சி நுாலிழைகள் வைத்துள்ளனர். திருப்பூருக்கு தேவையான நுாலிழைகள் இன்று வந்துள்ளன; மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் குஜராத்தில் சென்று பார்த்தது, இன்று திருப்பூரிலேயே கிடைக்கிறது. கட்டாயம், அனைவரும் கண்காட்சியை பார்வையிட வேண்டும்.- தாமோதரன்பனியன் உற்பத்தியாளர்----------------பிரமிக்க வைத்தது...உள்நாட்டு பனியன் ஆடை ஆர்டர் தொடர்பாக, நேற்று முன்தினம் திருப்பூர் வந்திருந்தேன். அப்போது, 'யார்னெக்ஸ்' கண்காட்சி நடத்துவதை கேள்விப்பட்டேன். அன்றாட பணிகளுடன், கண்காட்சியை பார்வையிடவும் நேரம் ஒதுக்கினேன்; இன்று முழுமையாக சுற்றி பார்த்தேன். புதிய மறுசுழற்சி ரக நுாலிழைகள், துணிகள் பிரமிக்க வைக்கின்றன. நாங்கள் எப்போதும் எதிர்பார்ப்பும், பசுமை சார் உற்பத்திக்கான அனைத்து அம்சமும் இடம்பெற்றுள்ளன.- ஷெனல்பிராண்டட் நிறுவன வர்த்தகர்----------------இயற்கை வழி நுாலிழைமூங்கில் நாரில் தயாரிக்கும் நுாலிழைகள், 'ஜக்கார்டு' நுாலிழைகள், டென்சில், 'மொடால்' என, அனைத்து வகையான நுாலிழைகளையும் வழங்கி வருகிறோம். எங்களது ஸ்டாலுக்கு வரும் வாடிக்கையாளர், இயற்கை வழி நுாலிழைகள் குறித்து அதிகம் கேட்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், முழுவதும் பருத்தியை மட்டுமே சார்ந்திருந்தோம்; தற்போது செயற்கை நுாலிழை, இயற்கைவழி நுாலிழைகளுக்கு மாறிவருகிறோம். இக்கண்காட்சி, வாடிக்கையாளர் - நுால் விற்பனையாளர் சந்திப்புக்கு ஏற்றதாக இருக்கிறது.- பார்த்திபன்நுால் வர்த்தகர்----------------கட்டாயம் பார்க்க வேணும்!திருப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 'யார்னெக்ஸ்' கண்காட்சியில், புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள், ஒரு நாளை கண்காட்சிக்காக செலவழித்தால், பல்வேறு பயன்களை பெற்று பயன்பெற முடியும். உற்பத்தியாளர்கள், அல்லது நிறுவனத்தின் அலுவலர்களை கட்டாயம் சுற்றிப்பார்க்க அறிவுறுத்த வேண்டும்.- பாலகிருஷ்ணன்லகு உத்யோக் பாரதி----------------மறுசுழற்சி தேவைஇன்றைய ஜவுளித்தொழில், நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி, என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பை எதிர்பார்க்கிறது. அதற்கு, நுாலிழையில் இருந்தே மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என, நாங்கள் பசுமை சார் உற்பத்தி, மறுசுழற்சி நுால் உற்பத்தி செய்கிறோம். கண்காட்சியில், வாடிக்கையாளரின் அதுதொடர்பாகத்தான் அதிகம் விசாரிக்கின்றனர். மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் நிறங்களில், நுால் தயாரித்து கொடுக்கிறோம்.- பெத்தபெருமாள்நுாற்பாலை பங்குதாரர்----------------ராஜஸ்தானில் இருந்து, எங்களது நிறுவனம், 60 ஆண்டுகளாக நுாலிழை முதல், பின்னல் துணி வரை தயாரித்து கொண்டிருக்கிறது. பருத்தி நுாலிழையில் மட்டும் இருந்த உற்பத்தியாளர், 'ஸ்பெஷல்' நுாலிழைக்கு மாறி வருகின்றனர். அதற்காகவே முழுவதும், இயற்கைக்கு பாதுகாப்பான, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில், மறுசுழற்சி முறையில் நுால் தயாரித்து கொடுக்கிறோம். நுாலிழை 'ேஷட்' தொடர்பான புத்தகத்தை, கண்காட்சி திறப்பாளர் சக்திவேல் வெளியிட்டது எங்களுக்கு பெருமை.- திவாரிடெக்ஸ்டைல் நிறுவனம்----------------நல்ல வரவேற்பு...ஏற்றுமதியில் மட்டுமல்ல, உள்நாட்டு பனியன் உற்பத்தியிலும் செயற்கை நுாலிழை மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பம் எதிர்பார்க்கப்படுகிறது. கடல்பாசி, வாழை, மூலிகை செடிகள், பட்டு, லினன், 'பெட்'பாட்டில்களில் தயாரிக்கப்படும் சாயமிடப்பட்ட பாலியஸ்டர் நுால்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. நாங்கள், உ.பி., மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு தேவையான நுாலிழையை வழங்க தயாராக இருக்கிறோம்.- நமீஸ் சுக்லாஉள்நாட்டு விற்பனை பிரிவுதலைவர், உ.பி., - நமது நிருபர் -