ஸ்ரீராஜ ராஜேஸ்வரி கோவிலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வழிபாடு
திருப்பூர்: அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில் அமைக்கப்பட்டுள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை, 7:00 மணிக்கு நடைபெறுகிறது.கோவில் அருகே அமைக்கப்பட்ட யாகசாலையில், முதற்கால வேள்வி பூஜைகள் நேற்று முன்தினம் மாலை துவங்கின. இன்று காலை, இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மஹாதேவன் மற்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு செய்தனர்.முன்னதாக நீதிபதிகளை ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் டிரஸ்ட் தலைவர் ஞானகுரு, ஆடிட்டர் ராமநாதன், பெங்களூரு சபேச சிவாச்சாரியார், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து வேலுார், கீழ்மின்னல், ரத்னகிரி பாலமுருகனடிமை சுவாமி கோவில் கட்டமைப்பை பார்வையிட்டு, யாக சாலை பூஜைகளில் பங்கேற்று வழிபட்டார்.