உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  100 சதவீத ஓட்டுப்பதிவு க்யூஆர் கோடு அறிமுகம்

 100 சதவீத ஓட்டுப்பதிவு க்யூஆர் கோடு அறிமுகம்

அவிநாசி:சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத ஓட்டுப்பதிவை இலக்காக கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் அவிநாசியில் துவங்கப்பட்டது. அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா முன்னிலை வகித்தார். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதமாக, www.ThumbsupToVote.com' என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தில் சென்று 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு நான் ஆதரவளிக்கிறேன், என ஆங்கிலத்தில் I support for 100% voting' என்ற பட்டனை கிளிக் செய்து, தங்களது ஆதரவை பதிவு செய்யலாம். இதுதவிர உருவாக்கப்பட்டுள்ள 'க்யூஆர் கோடு' வாயிலாக, இணையதளத்தை எளிதில் அணுகி பிரச்சாரத்தில் பங்கேற்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் 'க்யூ ஆர் கோடு' ஸ்கேன் செய்து, 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை