உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் போராட்டம் நடத்த திட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் போராட்டம் நடத்த திட்டம்

அவிநாசி; திருப்பூர் - கரூர் - ஈரோடு ஆகிய மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைந்த மாநாடு திருமுருகன்பூண்டியில் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். கோவை மண்டல மாநிலச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சாரதி வரவேற்றார். தொழிற்சங்க கொடியை ராஜேஷ், சிவகுமார், ஜெகதீசன் ஆகியோர் ஏற்றினர். மண்டல செயலாளர் திருநாவுக்கரசு உறுதிமொழி ஏற்புரை வாசித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் ஜெகதீசன் அரசியல் அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் சாமிவேல், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநிலத் தலைவர் வரதராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.உலக வங்கியில் கடன் பெற்று தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான முழு தொகையையும் வழங்காமல் தனியாருக்கு தாரை வார்த்து பெயரளவிற்கு மட்டும் சேவையை நடத்தி வருவதை சட்ட ரீதியாக முறியடிப்பது. பா.ஜ.,வையும், மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களையும் எதிர்க்கிறோம் என தமிழகத்தில் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வினர், பா.ஜ., அரசு ஆளும் மாநிலங்களில் கூட கொண்டு வராத தொழிலாளர் சட்ட தொகுப்புகளை மறைமுகமாக தமிழகத்தில் அமல்படுத்தி வருகின்றனர்.சட்டப்படி பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுக்கும் தனியார் நிர்வாகத்தின் சட்டவிராத செயல்பாட்டிற்கு ஆதரவாக தமிழக அரசு உள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களையும் அணி திரட்டி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட செயலாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், சிவசங்கர், சுதன், மாவட்ட பொருளாளர்கள் பெரியசாமி, சோமசுந்தரம் ஆகியோர் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அரசு மருத்துவமனை உதவி பணி தொழிலாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், திருமுருகன்பூண்டி ரோட்டரி பட்டய தலைவர் முருகானந்தம் வாழ்த்துரை வழங்கினர்.சாது மிரண்டால் காடு கொள்ளாது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை