13 துணை தாசில்தார் பணியிடம் மாற்றம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் துணை தாசில்தார் 13 பேரை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.அதன் விவரம் வருமாறு:நீதித்துறை பயற்சி முடித்த கதிர்வேல், காங்கயம் வாணிப கிடங்கு உதவி மேலாளராகவும், குணசேகரன், கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தாராகவும், சபரிகிரி, 'ஓ' பிரிவு தலைமை உதவியாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.உடுமலை தலைமை யிடத்து துணைதாசில்தார் சிவகுமார், அமராவதி சர்க்கரை ஆலைக்கும், அங்கு பணிபுரியும் சாந்தி, உடுமலைக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.ஊத்துக்குளி மண்டல துணை தாசில்தார் பிரகாஷ், பல்லடத்துக்கும், அங்கு பணிபுரியும் பாலவிக்னேஷ், திருப்பூர் வடக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.கலெக்டர் அலுவலக 'ஊ' பிரிவு தலைமை உதவியாளர் சரவணகுமார், ஊத்துக்குளி மண்டல துணை தாசில்தாராகவும், பல்லடம் தேர்தல் துணை தாசில்தார் தேன்மொழி, தாராபுரம் மண்டல துணை தாசில்தார் - 2 ஆகவும்; அங்கு பணிபுரியும் ராதா, பல்லடத்துக்கு தேர்தல் துணை தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், லஞ்ச பணம் காணாமல்போனது தொடர்பாக அலுவலர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்த கலாவாணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.அங்கு பணிபுரியும் மகேஸ்வரி, ஊத்துக்குளி தலைமையிடத்து துணை தாசில்தாராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் வடக்கு மண்டல துணை தாசில்தார் பரமேஷ், கலெக்டர் அலுவலக 'ஊ' பிரிவு தலைமை உதவியாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.