உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்

மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்

திருப்பூர்; மாவட்டம் முழுதும், 17 தாசில்தார்களை இடமாற்றி, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்றிரவு உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த பரமேஷ், திருப்பூர் வடக்கு, தாசில்தார் அலுவலக மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப்படுகிறார்; இப்பணியிடத்தில் இருந்த லோகநாதன், வடக்கு தாசில்தார் அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராக மாற்றப்படுகிறார்.மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த ஜெயலட்சுமி, தாராபுரம் தாசில்தார் அலுவலக தலைமையிடத்து, துணை தாசில்தாராக மாற்றப்படுகிறார்; இப்பணியிடத்தில் இருந்த கோபால், திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக, துணை தாசில்தாராக(கே.எம்.யு.டி.,) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த ஈஸ்வரி, ஊத்துக்குளி தாசில்தார் அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்படுகிறார்; இப்பணியிடத்தில் இருந்த மகேஸ்வரி போலீஸ் பயிற்சிக்கு செல்கிறார்.மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த சிவக்குமார், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக மாற்றப்படுகிறார். இப்பணியிடத்தில் இருந்த, வளர்மதி போலீஸ் பயிற்சிக்கு செல்கிறார்.அவிநாசி, தாசில்தார் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக இருந்த ஸ்ரீ நந்தினி போலீஸ் பயிற்சிக்கு செல்கிறார். இப்பணியிடத்துக்கு திருப்பூர் மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த சாந்தி நியமிக்கப்படுகிறார்.திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக மண்டல துணை தாசில்தார் லோகநாதன், திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிமாற்றம் செய்யப்படுகிறார்; இப்பணியிடத்தில் இருந்த சிவசக்தி, ஊத்துக்குளி தாசில்தார் அலுவலக மண்டல துணை தாசில்தாராக மாற்றப்படுகிறார்.திருப்பூர் தெற்கு தேர்தல் துணை தாசில்தார் கணேஷ்வரி, ஊத்துக்குளி வட்ட வழங்க அலுவலராகவும், ஊத்துக்குளியில் பணியாற்றிய வட்ட வழங்கல் அலுவலர் சதிஸ்குமார், திருப்பூர் தெற்கு துணை தாசில்தாராகவும் பணிமாற்றம் செய்யப்படுகின்றனர்.திருப்பூர் கலெக்டரின் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தலைமை உதவியாளர் பிரேமலதா, 'ஈ' பிரிவு தலைமை உதவியாளராக மாற்றப்படுகிறார். இப்பணியிடத்தில் இருந்த அருண்குமார் போலீஸ் பயிற்சிக்கு சென்றுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தலைமை உதவியாளராக, துணை தாசில்தார் (கே.எம்.யு.டி.,) பபிதா நியமிக்கப்பட்டுள்ளார்.போலீஸ் பயிற்சிக்கு சென்று திரும்பிய திருப்பூர் தெற்கு மண்டல துணைதாசில்தார் கார்த்திகேயன், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் பாலவிக்னேஷ் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ