ஜமாபந்தியில் மக்கள் கொடுத்த 177 மனுக்கள்
உடுமலை, ;உடுமலை தாலுகாவில், பெதப்பம்பட்டி உள் வட்ட கிராமங்களுக்கு நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில், 177 மனுக்கள் பெறப்பட்டன.உடுமலை தாலுகாவிற்கான ஜமாபந்தி, கடந்த, 20ம் தேதி துவங்கியது. இறுதி நாளான நேற்று, பெதப்பம்பட்டி உள்வட்டத்திற்கு உட்பட்ட, மூங்கில் தொழுவு, வாகத்தொழுவு, வீதம்பட்டி, கொங்கல் நகரம், சோமவாரபட்டி, தொட்டம்பட்டி, முக்கூட்டு ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி, புதுப்பாளையம், இலுப்ப நகரம், பண்ணைக்கி-ணறு ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பா தேவி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோரி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 177 மனுக்கள் பெறப்பட்டன.