உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வக்கீல் கொலை வழக்கு: 18 பேர் கோர்ட்டில் ஆஜர்

 வக்கீல் கொலை வழக்கு: 18 பேர் கோர்ட்டில் ஆஜர்

திருப்பூர்: தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 41; மாற்றுத்திறனாளி. ஐகோர்ட் வக்கில். இவருக்கும், இவரின் சித்தப்பா தண்டபாணி குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. அவர் நடத்தி வரும் தேன்மலர் மெட்ரிக் பள்ளியில், விதிமுறை மீறி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான குற்றஞ்சாட்டில், சம்பந்தப்பட்ட வகுப்பறைகளை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பான முன்விரோதத்தில் ஜூலை 28ம் தேதி, கூலிப்படையினர், முருகானந்தத்தை வெட்டி கொன்றனர். இதில், தண்டபாணி, அவரின் மகன் கார்த்திகேயன் உட்பட, 20 பேர் கைது செய்யப்பட்டனர். தாராபுரம் ஜே.எம். கோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு, 18 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு மாஜிஸ்திரேட்உமாமகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையை டிச. 5ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ