ஆபாச பேச்சு பகிர்வதாக மிரட்டிய 2 பேர் கைது
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்த, 28 வயது இளம்பெண். அழகு நிலையத்தில் பயிற்சிக்கு சென்றார். அங்கு திருப்பூரை சேர்ந்த பிரபு, 27, பானு, 32 ஆகியோரும் பயிற்சிக்கு வந்திருந்தனர். மூன்று பேர் இடையே பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண், பிரபுவிடம் கடனாக பணம் கேட்டார். பணம் கொடுக்க வேண்டுமென்றால், தன்னுடன் நேரம் செலவிடுமாறும், ஆபாசமாக வீடியோ காலில் பேசுமாறும் கூறினார். அப்பெண்ணும் வீடியோ காலில் பேசியதாக தெரிகிறது. இதை, ஸ்கிரீன் ஷாட்களை எடுத்த பிரபு, பானுவுக்கு பகிர்ந்தார். தொடர்ந்து, பானுவும், பிரபுவும் சேர்ந்து, பெண்ணின் கணவருக்கு அனுப்பினர். மேலும் சமூக வலைதளங்களில் பகிர்வதாக மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.