மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
10-Oct-2025
திருப்பூர்: சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தை சேர்ந்தவர் உதயா, 35. திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள உலகாத்தம்மன் சித்தாயி கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து, 2 ஆயிரத்தை திருடி சென்றார். நல்லுார் போலீசார் உதயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர், ஜே.எம்., 4 கோர்ட் மாஜிஸ்திரேட் லோகநாதன், உதயாவுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் கவிதா ஆஜரானார்.
10-Oct-2025