21,573 டன் உரம் கையிருப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 87 டன், சிறுதானியங்கள், 39 டன், பயறு வகைகள், 16 டன், எண்ணெய் வித்துக்கள், 43 டன் என இருப்பு வைக்கப்பட்-டுள்ளன.மேலும் ரசாயன உரங்களான யூரியா - 6,652 டன், டி.ஏ.பி., - 1,399 டன், பொட்டாஷ் - 1,827 டன், காம்ப்ளக்ஸ் - 11,695 டன் என மொத்தம், 21,573 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இடுபொருட்கள், அந்தந்த பகுதியில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.