மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்: 7 பேருக்கு 'காப்பு'
18-Nov-2024
திருப்பூர்; ஊதியூரில் சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட, 23 பேரை கைது செய்து, 3.66 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், ஊதியூர் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாக சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.ஊதியூர் அருகே மேட்டுப்பாறை கிராமத்தில் விஜயகுமார், 45 என்பவருக்கு சொந்தமான குடோனில் சீட்டு விளையாடுவது தெரிந்தது. இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார் குடோனுக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.சீட்டாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் மனோகரன், 45, சிவனேஸ்வரன், 33, பிரபு, 32 உட்பட, 23 பேரைகைது செய்து, மொபைல் போன்கள், டூவீலர்மற்றும் 3 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாயைபறிமுதல் செய்தனர்.
18-Nov-2024