உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2.5 டன் ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்

2.5 டன் ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்

திருப்பூர்; மாவட்ட குடிமைப்பொருட்கள் பறக்கும் படை தாசில்தார் ராகவி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்குளியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்; நடுப்பட்டியில் இருந்து திருப்பூர் ரோடு வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, 48 மூட்டைகளில் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. வாகன டிரைவர் தப்பிவிட்டார். ஈரோட்டில் இருந்து அரிசி கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் உத்தரவின் பேரில், வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ரெட்டிபாளையத்தில் உள்ள வாணிப கழக குடோனில் ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர். மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்தியவர் யார்; தொடர்புடையவர்கள் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி