உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேசத்தினர் 29 பேர் கைது

வங்கதேசத்தினர் 29 பேர் கைது

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம், அருள்புரம் பகுதியில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது குறித்து, கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலால், நேற்று அதிகாலை விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அங்கு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த, 27 பேர் மற்றும் முருகம்பாளையத்தில் தங்கியிருந்த இருவர் என, 29 பேரை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'கைதான அனைவரும் வங்கதேசத்தினர்; இவர்கள் எவ்வாறு சட்ட விரோதமாக இங்கு வந்தனர், எத்தனை நாட்களாக தங்கியுள்ளனர் என, விசாரித்து வருகிறோம். பெரும்பாலானோர் போலி ஆதார் அட்டை வைத்துள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை