மேலும் செய்திகள்
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
20-Dec-2024
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், கருமாபாளையத்தில் ஏழு நாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடந்து வருகிறது.நேற்று, முகாமில், கிராமப்புற பறவை கணக்கீடு செய்யும் பணி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் இயற்கை கழகம் நிர்வாகி ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பறவைகளை எவ்வாறு கணக்கீடு செய்வது என்பது குறித்து விளக்கினார்.மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன் குமார், திவாகர் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவியர் பறவைகள் கணக்கிட்டு பணியில் ஈடுபட்டனர்; மொத்தம் 37 வகை பறவையினங்கள் கணக்கீடு செய்யப்பட்டன.
20-Dec-2024