4 கிலோ குட்கா பறிமுதல்
திருப்பூர்: திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதிகளில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபரிடம் சோதனை செய்த போது, 4 கிலோ 400 கிராம் அளவுக்கு குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கீதம்சிங், 39 என்பதும், சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரிகள், கீதம் சிங்கிற்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.