உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மெத்தபெட்டமைன் 4 பேர் கைது

 மெத்தபெட்டமைன் 4 பேர் கைது

திருப்பூர் : திருப்பூர் தனியார் ஓட்டலில், 'மெத்தபெட்டமைன்' பயன்படுத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், தட்டான்தோட்டத்தைச் சேர்ந்தவர் விவேக், 39. இவர், 'ஆன்லைன்' செயலி வாயிலாக திருப்பூரைச் சேர்ந்த சுந்தர், 30, ஜோயல் மாத்யூ, 25 மற்றும் சந்திரசேகர், 27 ஆகியோருடன் நண்பரானார். பெங்களூரூ சென்ற விவேக், அங்கிருந்து 'மெத்தபெட்டமைன்' போதை பொருளை வாங்கி வந்துள்ளார். தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு, ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து அங்கு போதை பொருளைப் பயன்படுத்தியுள்ளார். தகவல் அறிந்து சென்ற வடக்கு போலீசார் அவர்களிடமிருந்து, 1.18 மில்லிகிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்து, அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். போதைப் பொருள் வாங்கிய விவரம் குறித்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை