உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 4.5 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

4.5 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

திருப்பூர்; பீஹார் மாநிலம், பாட்னாவில் இருந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு ரயிலில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருப்பூர் ரயில்வே போலீசார் ஈரோட்டில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்காணித்து வந்தனர். முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகப்படும் விதமாக இருந்த வடமாநில பயணி, இருவரிடம் சோதனை செய்து விசாரித்தனர்.பீஹாரை சேர்ந்த ஜவஹர் கோப், 38, சுஜீத்குமார், 23 ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களை திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !