திருப்பூர் மாவட்டத்தில் 5 நீதிபதிகள் நியமனம்
திருப்பூர் : தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் நீதிபதிகள் இடமாற்றம், புதிய நீதிபதிகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்துக்கு, 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் மாஜிஸ்திரேட் அந்தஸ்திலான நீதிபதிகள், 72 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், நீதித்துறை மூலம் நேரடியாக, 230 பேர் தேர்வு செய்யப்பட்டு புதிதாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை, ஐகோர்ட் பதிவாளர் ஜோதிராமன் பிறப்பித்துள்ளார். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களில், 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதியாக விஜயலட்சுமி, ஜே.எம்.,எண்: 2 மாஜிஸ்திரேட்டாக, நாடியா பாத்திமா, ஜே.எம்.எண்: 3 மாஜிஸ்திரேட் தனலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர, அவிநாசி மாவட்ட உரிமையியல் நீதிபதியாக கண்மணி, காங்கயம் ஜே.எம்.,கோர்ட்டுக்கு தேன்மொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.