உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  54 யூனிட் ரத்தம் சேகரிப்பு

 54 யூனிட் ரத்தம் சேகரிப்பு

அனுப்பர்பாளையம்: திருப்பூர், சிகரங்கள் அறக்கட்டளை சார்பில், 94வது ரத்ததான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உடுமலை அரசு மருத்துவமனை குழுவினர் 54 யூனிட் ரத்தம் சேகரித்தனர். ரத்தம் வழங்கியோருக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. திருப்பூர் ஐ பவுண்டேஷன் சார்பில், 75 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 10 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ரேவதி மருத்துவமனை சார்பில், நடந்த பொது மருத்துவ முகாமில் 200 பேர் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளைஅறக்கட்டளை தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி