உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 60 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

60 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

திருப்பூர்; திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு முதல் வரும், 8ம் தேதி வரை, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25 பஸ்கள் என மொத்தம், 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.'பக்ரீத் பண்டிகை, ஞாயிறு இரு தினங்கள் விடுமுறை என்பதால், கூட்டத்துக்கு ஏற்ப பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எதிர்பார்த்த கூட்டமில்லையெனில் பஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை