இன்றும், நாளையும் 60 சிறப்பு பஸ்கள்
திருப்பூர்; வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வார விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவ்வகையில், இன்றும், நாளையும் திருப்பூர் கோவில்வழி, மத்திய பஸ் ஸ்டாண்ட், தலா, 20 பஸ்கள் வீதம், 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் வழக்கமான பயண கட்டணமே வசூலிக்கப்படும், என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.