அரசு கேபிள் இணைப்புக்காக 6 ஆயிரம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்
திருப்பூர்; அரசு கேபிள் 'டிவி' இணைப்புகளுக்கு எச்.டி., பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்துக்கு, 6 ஆயிரம் பாக்ஸ்கள் வந்துள்ளன. 6 ஆயிம் பாக்ஸ்
தற்போது, அரசு கேபிள் டிவி நிறுவனம், ஆபரேட்டர்களுக்குஎச்.டி., பாக்ஸ்களை வழங்க துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 600 அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர்; 45 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக, ஆறாயிரம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளன. அவை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.எச்.டி., செட்டாப் பாக்ஸ் குறித்த செயல் விளக்க கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கேபிள் டிவி தாசில்தார் முரளி தலைமை வகித்தார். டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் அரசு கேபிள் டிவிஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.அரசு கேபிள் இணைப்பில் எச்.டி., பாக்ஸ் பொருத்தப்பட்டு, காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. எச்.டி., பாக்ஸ் தேவைப்படும் ஆபரேட்டர்கள், https://www.tactv.inஎன்கிற தளத்தில் கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.'எச்.டி., பாக்ஸ் வழங்குவதன் மூலம், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் நீண்ட காலமாக சந்தித்துவந்த சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. எச்.டி.எம்.ஐ., கேபிள் மூலம், அனைத்து டிவிக்களுடனும் பாக்ஸை எளிதாக இணைக்க முடியும். அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் எச்.டி., சேனல்களுக்கான டேரீப்களும் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.அதனால் இனி, மக்கள் அரசு கேபிள் இணைப்புகளை விரும்பி பயன்படுத்த துவங்குவர்;மாவட்டத்தில் அரசுகேபிள் இணைப்பு எண்ணிக்கை வேகமாக உயரும்,' என, அரசுகேபிள் ஆபரேட்டர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.அரசு கேபிள் 'டிவி'; பின்னடைவு ஏன்?அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், மிகக்குறைந்த மாத கட்டணத்தில், அதிக சேனல்களை வழங்கிவருகிறது. ஆனாலும், திடீரென ஏற்படும் ஒளிபரப்பு தடை, எச்.டி., பாக்ஸ் இல்லாதது பெரும் பின்னடைவாக இருந்துவந்தது. அரசு கேபிள் இணைப்புகளில் வழங்கப்படும் எச்.டி., பாக்ஸ்களை, ஏ.வி., எனப்படும் ஆடியோ, வீடியோ தனித்தனி 'பின்' கொண்ட பழைய மாடல் 'டிவி'க்களிலேயே இணைக்க முடியும். பெரும்பாலான புதிய மாடல் டிவிக்களில், எச்.டி.எம்.ஐ., கேபிள் மூலமாக மட்டுமே 'செட்டாப்' பாக்ஸ்களை இணைக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.கட்டணம் குறைவு என்றாலும் கூட, புதிய 'டிவி'க்களுடன் எச்.டி., செட்டாப் பாக்ஸை இணைக்க முடியாதது, துல்லிய காட்சிகளை வழங்கும் எச்.டி., சேனல்களை பார்க்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால், அரசு கேபிள் இணைப்பை பயன்படுத்த மக்கள் பலரும் தயங்கினர். அரசு கேபிள் டிவி நிறுவனம், விரைவில் எச்.டி., பாக்ஸ் வழங்கப்படும் என சொல்லிவந்தது; ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும்எச்.டி., பாக்ஸ்கள் வழங்காமல் ஆபரேட்டர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றம் கொடுத்துவந்தது.இந்நிலையில் தற்போதுதான் எச்.டி., பாக்ஸ்கள் வந்தன.