உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 63 நாயன்மார் உற்சவ திருமேனிகளுக்கு அபிேஷகம்

63 நாயன்மார் உற்சவ திருமேனிகளுக்கு அபிேஷகம்

திருப்பூரில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் விழாவாக நேற்று, 63 நாயன்மார்களுக்கு, பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம் நடந்தது.கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருடசேவை புறப்பாடு மண்டப கட்டளை பூஜைகள் நடந்து வருகிறது. குறிப்பாக, 63 நாயன்மார்களுக்கு, பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கும். அதற்காக, பிற பகுதிகளில் இருந்து, 63 நாயன்மார் சிலைகள் வாங்கி வருவது வழக்கம்.இந்நிலையில், அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன், 63 நாயன்மார்களுக்கு உற்சவ திருமேனிகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், குலாலர் பிள்ளையார் கோவிலில், சிலைகளுக்கு கண் திறக்கும் பூஜைகள் நடந்தது. நேற்று காலை, கோவில் வளாகத்தில், 63 நாயன்மார்களுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. சிவகைலாய வாத்தியத்துடன், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி