உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.பூண்டியில் 2ம் கட்டமாக 6,500 குடிநீர் இணைப்புகள்

தி.பூண்டியில் 2ம் கட்டமாக 6,500 குடிநீர் இணைப்புகள்

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சியில், இரண்டாம் கட்டமாக 6,500 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் - பாரதி நகரில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேட்டுப்பாளையம் இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ராக்கியபாளையம், தேவராயம்பாளையம், ஊமையஞ் செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 6,500 குடிநீர் குழாய்களுக்கு இதன் வாயிலாக இணைப்பு கொடுக்கப்பட்டது.நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள், நகராட்சி கமிஷனர் பால்ராஜ் (பொறுப்பு) மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ