உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 70 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

70 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

திருப்பூர்; திருப்பூரில், 70 கிலோ கஞ்சா சாக்லேட் கடத்திய ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா, குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும் வகையில் வடமாநில வாலிபர் ஒருவர் வீட்டில் சோதனை செய்தனர். அதில், 70 கிலோ கஞ்சா சாக்லேட், 10 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த ராஜேந்திர ராஜூராவ், 32 என்பது தெரிந்தது. அவரை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை