உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றும் நாளையும் 70 சிறப்பு பஸ் இயக்கம்

இன்றும் நாளையும் 70 சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பூர்; 'பொதுமக்கள் வெளியூர் பயணிக்க வசதிக்காக, திருப்பூரில் இருந்து இன்றும், நாளையும், 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என, திருப்பூர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, ஒவ்வொரு வாரமும் கூடுதலாக, 40 - 60 சிறப்பு பஸ்கள் பிற பகுதிகளுக்கு திருப்பூரில் இருந்து இயக்கப்படும். கடந்த வாரம் கோடை விடுமுறை துவங்கியதால், 85 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. இரண்டு நாட்களும் வெளிமாவட்ட பஸ்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.இந்நிலையில், இன்றும், நாளையும் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு, 30, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, கும்பகோணம் மார்க்கமாக, 25, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 என மொத்தம், 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தொலைதுார பஸ்களின் முன்பதிவு திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள முன்பதிவு மையத்தில் நடக்கிறது. தேவையானவர்கள் விபரங்களை நேரில் சென்று அறியலாம் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ