உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 850 கிலோ குட்கா சிக்கியது; பெண் உட்பட 8 பேர் கைது

850 கிலோ குட்கா சிக்கியது; பெண் உட்பட 8 பேர் கைது

பல்லடம் ; கேரளாவில் இருந்து பல்லடத்துக்கு, குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள சிலருக்கு கைமாற்றப்படுவதாக, பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பல்லடம் போலீசார் நள்ளிரவில் தீவிர வாகன சோதனை மற்றும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த சுதின்குமார், 28; சுனில், 30; வினிஷ், 28; ரதீஷ், 40, சுதீஷ், 38, கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையை சேர்ந்த ராகுல், 25 ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல், கேரளாவில் இருந்து, குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் வந்தனர். பல்லடம் அம்மாபாளையத்தை சேர்ந்த பொன்வேல்ராஜ், 50 மற்றும் கம்மாளபட்டியை சேர்ந்த கார்த்திகா, 26 ஆகிய இருவரும், கேரளாவை சேர்ந்த கும்பலிடம் இருந்து குட்கா பொருட்களை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். காரணம்பேட்டை அருகே, நள்ளிரவு வரை காத்திருந்த பல்லடம் போலீசார், 8 பேர் கொண்ட கும்பலையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து, 850 ஒரு கிலோ குட்கா பொருட்கள், 2 ஜீப்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை