உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைமை தபால் நிலையத்தில் அறுந்த மின் கம்பி யால் திக்... திக்

தலைமை தபால் நிலையத்தில் அறுந்த மின் கம்பி யால் திக்... திக்

தி ருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே, தலைமை தபால் நிலையம் உள்ளது. நேற்று மாலை திடீரென கருமேக கூட்டங்கள் திரண்டு, காற்றின் வேகம் அதிகரித்தது. தாக்குபிடிக்க முடியாமல் மின்கம்பி அறுந்து, தலைமை தபால் நிலைய வாசலில் விழுந்தது. தபால் நிலையத்துக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தபால் ஊழியர்கள் தற்காலிகமாக, சேர் ஒன்றை எடுத்துப்போட்டு, அவ்விடத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்த, அடுத்த சில நிமிடங்களில் கனமழை பெய்ய துவங்கியது; இதனால், அறுந்து விழுந்த மின்கம்பியை உடனடியாக அகற்ற முடியவில்லை. மழையும் பெய்து கொண்டிருந்ததால், வாடிக்கையாளர் உள்ளே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை நின்றவுடன் மின்வாரிய ஊழியர்கள் வந்து அறுந்த மின்கம்பியை சீர்செய்தனர். எஸ்.ஆர்., நகரில் ஆபத்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, ஓடைகள் வழியாக நொய்யலில் திறந்துவிடும் வகையில் பணி திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாண்டிபாளையம் ரிங் ரோட்டில், அணைப்பாளையம் பாலம் பகுதியில் துவங்கும் வடிகால் பணிக்காக கரையோரம் குழாய் பதித்து சுத்திகரிப்பு மையத்துக்கு வரும் வகையில், புதை வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியை இது கடந்து செல்கிறது. இங்குள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ரோட்டில் பொங்கிப் பாய்கிறது. நேற்று மழை பெய்த நிலையில் மழைநீருடன் சேர்ந்து, பாதாள சாக்கடை மூடியையே அசைக்கும் அளவு கழிவுநீரின் வேகம் இருந்தது. கழிவுநீர் அடைப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், இது ஆபத்தாக அமையும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !