உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமுதாயத்துக்கு பயன்படாத சமுதாயக்கூடம்

சமுதாயத்துக்கு பயன்படாத சமுதாயக்கூடம்

அனுப்பர்பாளையம்; -திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவப் பட்டியில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. சிறுபூலுவப்பட்டி, காவிலிபாளையம், காவிலிபாளையம்புதுார், ரங்கநாத புரம், கீதா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. முட்புதர் மண்டி அசுத்தமாக காணப்படுகிறது. சமையல் கூடத்தில் சமையல் செய் வதற்கான எந்த வசதியும் இல்லை. குடிநீர் வசதியும் ஏற்படுத்தவில்லை. வளாகத்தில் வைத்து சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கழிப்பறை உள்ளது. கழிப்பறைக்கான தண்ணீர் வசதி இல்லை. சமுதாய கூடம் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால், இரவு நேரத்தில் மொட்டை மாடியில் மது அருந்துதல் உள்ளிட்ட சமுக விரோத செயல்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி