உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூட்டிய நுாலகம்; மக்கள் பாதிப்பு

பூட்டிய நுாலகம்; மக்கள் பாதிப்பு

உடுமலை: உடுமலை அருகே, ஊர்ப்புற கிளை நுாலகம் திறக்கப்படாததால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி, கிளுவன் காட்டூரில், ஊர்ப்புற கிளை நுாலகம் உள்ளது. சுற்று கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்த, இந்த நுாலகம் கடந்த சில மாதமாக பூட்டப்பட்டுள்ளது.இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, உள்ளே இருக்கும் நுால்களும் வீணாகி வருகிறது. எனவே, இந்த நுாலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை