உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்களிடம் கைவரிசை பலே ஆசாமி சிக்கினார்

பெண்களிடம் கைவரிசை பலே ஆசாமி சிக்கினார்

திருப்பூர்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வாங்கி தருவதாக பெண்களிடம், 5.5 லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை, ஐந்து ஆண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.கடலுார், திட்டக்குடியை சேர்ந்தவர் செல்வராசு, 51. கடந்த, 2018ம் ஆண்டு வெள்ளியங்காடு பகுதியில் தங்கி, சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்களிடம், மகளிர் சுய உதவிக்கள் வாயிலாக கடன் பெற்று தருவதாக தெரிவித்தார். கடன் பெற்று தருவதற்காக குறிப்பிட்ட தொகையை பெற்று, 5.5 லட்சம் ரூபாயை ஏமாற்றி மோசடி செய்தார். திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், செல்வராசு, பத்மாவதி என, இருவரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.கடந்த, 2021ம் ஆண்டு கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இவரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த செல்வராசுவை, ஐந்து ஆண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை