உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 16 வீடுகளில் கொள்ளை முகமூடி கும்பல் சிக்கியது

16 வீடுகளில் கொள்ளை முகமூடி கும்பல் சிக்கியது

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய பகுதிகளில் ஆக., 27 முதல் இம்மாதம் 1ம் தேதி வரை இரவில், 16 வீடுகளை உடைத்து, 45 சவரன் நகைகள், 3.22 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை, முகமூடி கும்பல் கொள்ளைஅடித்து சென்றது.உடுமலை, காங்கேயத்தில் தலா ஆறு, தாராபுரத்தில் நான்கு வழக்கு என, 16 வழக்குகள் பதியப்பட்டன. மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.இதில், சத்தீஸ்கரைச் சேர்ந்த முருகன் சிவகுரு, 45, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா, 40, சுரேஷ், 34, தங்கராஜ், 55 என, நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 32 சவரன் தங்க நகை மற்றும் இரு டூ - வீலர்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'சமீபத்திய 16 வழக்குகளை தவிர்த்து, மேலும் மூன்று பழைய வழக்குகளில் இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளது. 'கடந்த மாதம் மட்டும், 25 வழக்குகளில், 97 சவரன் நகை, 8.71 லட்சம் ரூபாய், ஐந்து டூ - வீலர்களை கொள்ளையடித்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ