மேலும் செய்திகள்
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
26-Jun-2025
காங்கேயம், காங்கேயம் அருகே, குடிநீர் இணைப்புக்கு, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பஞ்சாயத்து செயலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, குண்டடம் யூனியன், எல்லப்பாளையம்புதுார் பஞ்சாயத்து செயலாளர் செல்வராஜ், 51. எல்லப்பாளையம்புதுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பங்காம்பாளையம் பகுதியில் வசித்து வரும் மகேஷ்வரன், 44, என்பவர், தன்னுடைய புதிய வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெற, ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார். அதை பரிசீலனை செய்த பஞ்சாயத்து செயலாளர் செல்வராஜ், குடிநீர் இணைப்பு வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் தர விரும்பாத மகேஷ்வரன், திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகளின் ஆலோசனைபடி, நேற்று காலை எல்லப்பாளையம்புதுார் பஞ்சாயத்து அலுவலகம் சென்று, செயலாளர் செல்வராஜிடம் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சமாக, 3,000 ரூபாய் கொடுத்துள்ளார். அவர் பணத்தை வாங்கும்போது, அங்கு காத்திருந்த திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், செல்வராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத, 71 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். அலுவலக பணியாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
26-Jun-2025